சிக்பள்ளாப்பூரில் வியாபாரி உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிக்பள்ளாப்பூரில் வியாபாரி உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Jan 2019 3:01 AM IST (Updated: 31 Jan 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

சிக்பள்ளாப்பூரில், வியாபாரி உள்பட 2 பேரின் வீடுகளில் ரூ.5 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடிவருகிறார்கள்.

கோலார் தங்கவயல்,

சிக்பள்ளாப்பூர் தாலுகா நந்திகிராஸ் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். வியாபாரியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் மகேசின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ.3 லட்சத்தை திருடி சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மகேஷ் வீடு திரும்பினார். அப்போது வீ்ட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது மகேசுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் நந்தி கிராஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் பிராமணர் வீதியில் வசித்து வருபவர் நஞ்சுண்டராவ். சமையல் காண்டிராக்டரான இவர் குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடி சென்றனர். இதுபற்றி நஞ்சுண்டராவ் அளித்த புகாரின்பேரில் சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story