தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-31T22:44:21+05:30)

காங்கிரஸ் கட்சி சார்பில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்கலை,

தக்கலை பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மேம்பாலம் அமைக்கப்பட்டால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எனவே மேம்பாலம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று காலை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தக்கலை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., முளகுமூடு  வட்டார முன்னாள் குருகுல முதல்வர் ஜார்ஜ் பொன்னையா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தம்பி விஜயகுமார், தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட துணை செயலாளர் ஜாண் இக்னேசியஸ், நிர்வாகிகள் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story