‘கும்பகோணம் வீரசைவ மடத்துக்குள் வருகிற 3-ந் தேதி நுழைவோம்’ புதிதாக பதவியேற்ற மடாதிபதி பேட்டி
கும்பகோணம் வீர சைவ மடத்துக்குள் வருகிற 3-ந் தேதி நுழைவோம் என புதிதாக பதவியேற்ற மடாதிபதி கூறினார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம் அருகில் உள்ள வீரசைவ பெரிய மடத்தில் 97-வது மடாதிபதியாக நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார். இவர் திடீரென்று மாயமானார். இந்த நிலையில் அவர் மீது மோசடி புகார் தெரிவித்து மடாதிபதி பதவியில் இருந்து அவரை நீக்கியதாக கூறி புதிய மடாதிபதியாக பசவமுருக சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் நியமிக்கப்பட்டு பதவியேற்றார்.
இது குறித்து தகவல் அறிந்து கும்பகோணத்துக்கு வந்த பழைய மடாதிபதியின் ஆதரவாளர்கள், மடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து புதிய மடாதிபதியாக பொறுப்பேற்ற பசவமுருகசாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கினர். இந்த மோதலில் பசவ முருகசாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் கும்பகோணம் மேற்கு போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து மக்கள் கட்சி இளைஞரணி பொதுசெயலாளர் குருமூர்த்தி(வயது 43) மற்றும் உப்புகாரத்தெருவை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நகர செயலாளர் பாலாஜி(42) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய பசவ முருகசாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மற்றும் மடத்தின் சட்ட ஆலோசகர் குருசாமி ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நீலகண்ட சுவாமிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் மடத்துக்கு சொந்தமான இடத்தை மெட்ரோ ரெயில் நிறுவனம் கையப்படுத்திக்கொண்டு இழப்பீடாக ரூ.120 கோடி இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளது. அந்த பணத்தை மடத்தின் தேவைகளுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். ஆனால் நீலகண்ட சுவாமிகள், ரூ.120 கோடியையும் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.
வருகிற 3-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வீரசைவ பெரிய மடத்தின் பக்தர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நாங்கள் அனைவரும் வீரசைவ மடத்துக்குள் நுழைவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் கூறும்போது, நான் இனிமேல் மடத்தை விட்டுசெல்ல மாட்டேன். யாரையும் மடாதிபதியாக இருக்க அனுமதிக்கமாட்டேன். முன்பு இருந்த நிர்வாக கமிட்டியினரோ, புதிதாக வந்தவர்களோ அல்லது சித்திரதுர்கா மடத்தை சேர்ந்தவர்களோ வந்தால் மடத்தின் உள்ளே நுழைய விடமாட்டேன் என்றார்.

Related Tags :
Next Story