நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது தந்தை, மகனுக்கு வலைவீச்சு


நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது தந்தை, மகனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Feb 2019 3:00 AM IST (Updated: 2 Feb 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

நிலம் விற்பனை செய்வதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் தந்தை, மகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் லோகாம்பாள் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் மகேஷ் (வயது 40). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரிடம் அம்பத்தூர் புதூரைச் சேர்ந்த சுரேஷ்(40), அவருடைய மனைவி தாட்சாயினி (35) மற்றும் சுரேசின் தந்தை பாண்டுரங்கன்(64) ஆகியோர் மாதவரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த நிலத்துக்கு ரூ.52 லட்சம் விலை பேசி, முன்பணமாக ரூ.25 லட்சத்தை அவர்களிடம் மகேஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மீதி பணத்தை செலுத்தி அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்து தரும்படி மகேஷ் பலமுறை அவர்களிடம் கேட்டும், அவர்கள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமலும், முன் பணமாக வாங்கிய ரூ.25 லட்சத்தை திருப்பிக்கொடுக் காமலும் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகேஷ், இந்த மோசடி தொடர்பாக மாதவரம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் ராமலிங்கம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

அதில் சுரேஷ், தாட்சாயினி, பாண்டுரங்கன் 3 பேரும் சேர்ந்து மகேசிடம் நிலம் விற்பதாக கூறி ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்தது உறுதியானது.

இதையடுத்து தாட்சாயினியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ் மற்றும் அவருடைய தந்தை பாண்டுரங்கன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
1 More update

Next Story