மடிப்பு நுண்ணோக்கி பற்றிய பயிற்சி பட்டறை 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு


மடிப்பு நுண்ணோக்கி பற்றிய பயிற்சி பட்டறை 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2019 10:45 PM GMT (Updated: 2019-02-03T01:48:30+05:30)

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், அதன் நுண்ணுயிரியல் துறை சார்பாக ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி தொகுத்தல் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது.

பெரம்பலூர்,

இந்திய அரசின், அறிவியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப துறையின் நிதி உதவியுடன், குரும்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில், அதன் நுண்ணுயிரியல் துறை சார்பாக ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி தொகுத்தல் மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி பட்டறை நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். நுண்ணுயிரியல் துறை பேராசிரியரும், பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளருமான விஜயகுமார் வரவேற்றார். நுண்ணுயிரியல் துறை தலைவர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மேகாலாயா ஷில்லாங் செய்ன்ட் எட்மண்ட் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் டெபெல்மென் ஷெமியாங் கலந்து கொண்டு மடிப்பு நுண்ணோக்கியின் மூலம் ஆக்டினோபாக்டீரியாவை அடையாளப்படுத்துதல் பற்றி பேசினார். மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பன்னீர்செல்வம் மடிப்பு நுண்ணோக்கியின் ஆக்கம் மற்றும் பயன்பாடுகளைப் பற்றி பேசினார். மேலும் இந்த மடிப்பு நுண்ணோக்கியானது கல்வி மற்றும் ஆராய்ச்சியினை ஊக்குவிக்கும் சிறந்த கருவியாக செயல்படும் என்று கூறினார். பேராசிரியர் வினோத், ஆராய்ச்சி மாணவர்கள் கார்த்திகா, மதன், வெங்கடேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். 

Next Story