மாவட்ட செய்திகள்

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா + "||" + Festival of free goats

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா
மேட்டுப்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, 49 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்து 650 மதிப்பிலான வெள்ளாடுகளை வழங்கி பேசினார். இந்த விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் எஸ்தர் சீலா, உதவி இயக்குனர் மூக்கன், மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட அவைத் தலைவர் துரை, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் முத்துசாமி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் முருகேசன், ஊராட்சி செயலாளர் சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை மருத்துவர் ராமன் நன்றி கூறினார்.