கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:15 AM IST (Updated: 3 Feb 2019 8:14 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. 22½ கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27–ந் தேதி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பதி கோவிலை போன்று இங்கும்  பூஜைகளும், விழாக்களும் நடைபெறுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில் இருந்து அதிக அளவு பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். குறிப்பாக, குமரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி நெல்லை, மதுரை, சேலம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து மூலஸ்தானத்தில் உள்ள வெங்கடாசலபதி மற்றும் பத்மாவதி தாயார், ஆண்டாள் அம்மாள், கருடாழ்வாரை வணங்கினர். நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றிலும் தரையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது.

Next Story