நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்,
கரூர் மாவட்டம், வெள்ளாளப்பட்டி அருகே மூலகாட்டனூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 58). இவர் நொய்யல் அருகே மூனூட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் உறவினர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த 2 மர்மநபர்கள் அந்த மோட்டார் சைக்கிளை திருடி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார் கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது 2 பேரும் முன்னுக்கு, பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மண்மங்கலம் அருகே காளிபாளையத்தை சேர்ந்த அய்யனார் (19) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு இடங்களில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து திருடி விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அய்யனார் மற்றும் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story