காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2019 4:00 AM IST (Updated: 4 Feb 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி ராகுல் காந்தியை பிரதமராக்க ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என கரூர் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழியேற்றனர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கரூர்,

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று காலை கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன் உள்பட காங்கிரசார் திரண்டனர். பின்னர் அவர்கள் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பல கருத்துவேறுபாடு இருப்பினும் வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி ராகுல் காந்தியை பிரதமராக்க ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என கரூர் காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழியேற்றனர். பின்னர் அங்கு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில், ஜெயபிரகாஷ், தாந்தோன்றி குமார், சுரேகா பாலசந்தர் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story