சீர்காழி பகுதியில் எந்திரங்கள் தட்டுப்பாட்டால் அறுவடை பணி பாதிப்பு நெல்மணிகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
சீர்காழி பகுதியில் எந்திரங்கள் தட்டுப்பாட்டால் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. நெல்மணிகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சீர்காழி,
சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடிவடபாதி, கதிராமங்கலம், கன்னியாக்குடி, திருப்புங்கூர், கற்கோவில், புங்கனூர், மருதங்குடி, பெருமங்கலம், ஆதமங்கலம், கொண்டல், அகரஎலத்தூர், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகணி, அத்தியூர், விளந்திடசமுத்திரம், திட்டை, தில்லைவிடங்கன், சட்டநாத புரம், கடவாசல், எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது சம்பா அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சீர்காழி பகுதியில் போதிய அறுவடை எந்திரங்கள் இல்லாததால், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள். மேலும் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களில் இருந்து நெல்மணிகள் கீழே உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே வேளாண்துறையினர் சீர்காழி பகுதியில் விளைந்த சம்பா நெற்பயிரை அறுவடை செய்ய மற்ற மாவட்டங்களில் இருந்து எந்திரங்களை கொண்டு வந்து சீர்காழி பகுதியில் அறுவடை பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story