விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 4 Feb 2019 4:59 PM GMT)

விழுப்புரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கி வருகிற 10-ந்தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்தபடி முக்கிய சாலைகள் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று சாலை பாதுகாப்பு குறித்தும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

பேரணியானது கலெக்டர் பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி-சென்னை சாலை, நான்குமுனை சந்திப்பு, நேரு வீதி, காந்தி சிலை, ரெயில் நிலையம் வரை சென்று மீண்டும் கலெக்டர் பெருந்திட்ட அலுவலகத்தை வந்தடைந்தது. மேலும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ஜெயக்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், துணை போலீஸ் சூப்பரண்டு சங்கர், வட்டார போக்குவரத்து அலுவலர் பாலகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விமலா, சிவக்குமார், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுப்போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story