அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் - கலெக்டர் ஷில்பா வழங்கினார்
நெல்லை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன்களை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கன்வாடி மையங்களுக்கு செல்போன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, 2,562 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 66 தொகுதி மேற்பார்வையாளர்களுக்கு செல்போன்களை வழங்கினார்.
இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் தேசிய ஊட்டச்சத்து குழுமம் ‘போஷான் அபியான் திட்டம்’ சார்பில் மொத்தம் 2,628 செல்போன்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இதன் நோக்கம் 2,562 அங்கன்வாடி மையங்களில் பராமரித்து வரும் 11 பதிவேடுகள் அனைத்தும் Co-m-m-on Ap-p-l-i-c-at-i-on So-ftw-a-re என்ற செயலி (ஆப்) மூலம் பதிவு செய்யப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து அனைத்து விவரங்களையும் செல்போனில் பதிவு செய்ய உள்ளனர். இதன் மூலம் குடும்பங்களில் உள்ள அனைத்து நபர்களின் விவரங்களும் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் விவரங்கள் மிகத் துல்லியமாகவும், சரியானதாகவும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் ஜெயசூர்யா, மாவட்ட புள்ளியல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், ‘போஷான் அபியான்’ திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியா, மாவட்ட உதவியாளர் மாரியப்பன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜபிரியா மற்றும் ஜொசிற்றாள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story