பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர் கைது


பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 10:15 PM GMT (Updated: 2019-02-05T02:31:57+05:30)

மாணவியை கடத்தி சென்ற ஆங்கில ஆசிரியர் பாரதிராஜை போலீசார் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

கரூர்,

குளித்தலை தாலுகா தண்ணீர்பள்ளி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 31). இவர், வாங்கல் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 12-ம் வகுப்பு படிக்கும், 16 வயதுடைய மாணவி ஒருவரை திருமணம் செய்யும் நோக்கில் திருக்காம்புலியூர் பகுதியில் வைத்து பாரதிராஜா கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பாரதிராஜாவை தேடினார். இந்த நிலையில் மாணவியுடன், பாரதிராஜா திருச்சியில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கரூர் டவுன் போலீசார் திருச்சிக்கு வந்து, பாரதிராஜாவுடன் இருந்த மாணவியை மீட்டனர். பின்னர் அந்த மாணவியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து மாணவியை கடத்தி சென்ற ஆங்கில ஆசிரியர் பாரதிராஜை போலீசார் கைது செய்து, கரூர் கிளை சிறையில் அடைத்தனர். 

Next Story