கடந்த ஆண்டில் மராட்டியத்தில் 13 ஆயிரம் பேர் விபத்தில் உயிரிழப்பு


கடந்த ஆண்டில் மராட்டியத்தில் 13 ஆயிரம் பேர் விபத்தில் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 Feb 2019 2:47 AM IST (Updated: 5 Feb 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நடந்த சாலை பாதுகாப்பு வார தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில போக்குவரத்து துறை மந்திரி திவாகர் ராவ்தே கூறியதாவது:-

மும்பை, 

மராட்டியத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 59 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2 ஆண்டுகளை விட மிக அதிகமாகும். 2017-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 511 பேரும், 2016-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 935 பேரும் விபத்தில் பலியாகி இருந்தனர்.

கடந்த ஆண்டு விபத்தில் உயிரிழந்தவர்களில் 11 ஆயிரம் பேர் மனித தவறுகளால் இறந்துள்ளனர். அதிலும் 80 சதவீதம் பேர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்தை சந்தித்துள்ளனர்.

விபத்தில் இறந்தவர்களின் 66 சதவீதத்தினர் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தில் அதிக அளவு விபத்து நடக்கும் பகுதிகளாக 1,324 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களை விபத்து நடக்காதவண்ணம் மேம்படுத்த பொதுபணித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் இந்த ஆண்டில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியதன் காரணமாக வேகமாக வாகனம் ஓட்டி பிடிபட்டவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதித்து இ-செல்லான் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story