திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு அமைச்சர் காமராஜ் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 5 Feb 2019 11:00 PM GMT (Updated: 5 Feb 2019 6:47 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சம்பா பருவ நெல் கொள்முதல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். இதில் உணவுத்துறை முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர்் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர், அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு நெல் கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு ஏற்கனவே 600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் மேலும் 200 மூட்டைகள் உயர்த்தி 800 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில் இதுவரை 1 லட்சத்து 76 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முன்னதாக வடுவூர், வேளூக்குடி, கீழ்ப்பாலம் மற்றும் கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர், உதவி கலெக்டர்கள் பத்மாவதி, முருகதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story