சீர்காழி- நாகை 4 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அமைதி பேச்சுவார்த்தை விவசாயிகள் வெளிநடப்பால் பரபரப்பு
சீர்காழி- நாகை வரை 4 வழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் இருந்து நாகை வரை தற்போது உள்ள இருவழி சாலையையொட்டி 4 வழிச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மங்களம் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார்கள் சீர்காழி சங்கர், தரங்கம்பாடி சுந்தரம், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் கையகப் படுத்தும் பிரிவு தனி தாசில்தார்கள் ராணி, ராகவன், சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
பண்டரிநாதன்:- சீர்காழி சட்டநாதபுரம் புறவழிச்சாலையில் இருந்து நாகை வரை 4 வழிச்சாலை வெளிப்படை தன்மை இல்லாமல் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியையொட்டி தற்போது உள்ள சாலையின் இருபுறமும் 8 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்த மரக்கம்பம் நடப்படுகிறது. விவசாயிகளின் கருத்துக்களையும் கேட்காமலும், உரிய இழப்பீடு என்னவென்று தெரிவிக்காமலும் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஒரு சிலருக்கு மிக குறைந்த அளவு இழப்பீட்டுத்தொகை, அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விவசாயிகளை ஒழித்து கட்டிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
முத்துக்குமார்:- 4 வழிச் சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தும் நிலத்திற்கு சதுர அடிக்கு ரூ.200 வழங்க வேண்டும். பத்திர பதிவுத்துறை வழிகாட்டு மதிப்பின் தொகையில் 4 மடங்கு தொகையாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவு உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங் களை செயல்படுத்துவதற்கும், ஓ.என்.ஜி.சி., கெயில் ஆகிய நிறுவனங்களின் குழாய்களை பதிப்பதற்கும் நிலம் கையகப்படுத்துவது வேதனைக்குரியது.
இதைப்போல தலச்சங்காடு, அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, நடராஜப்பிள்ளை சாவடி, காத்திருப்பு, ராதாநல்லூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் தனி அலுவலர் மங்களம், கூறுகையில் விவசாயிகளின் கோரிக்கைகள் விழுப்புரத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், இதற்கான முடிவு தெரிய ஒரு மாதம் ஆகும் என தெரிவித்தார்.
அப்போது விவசாயிகள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடு மிக, மிக குறைவானது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேவலப்படுத்தி நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்துள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. சராசரியாக சதுர அடிக்கு ரூ.200 வழங்க வேண்டும். பாதிக்கப்படும் வீடுகளுக்கு வழங்கும் தொகையை 4 மடங்கு உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) நடராஜப்பிள்ளை சாவடி முக்கூட்டில் சாலை மறியல், உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில் அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story