கன்னியாகுமரி அருகே சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


கன்னியாகுமரி அருகே சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Feb 2019 4:30 AM IST (Updated: 6 Feb 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே புத்தளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று மணிகண்டன், 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியிடம் விளையாடுவது போன்று நடித்து அத்துமீறி இருக்கிறார்.

பின்னர் கடந்த 29-5-2016 அன்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.அப்போது குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

Next Story