வாடகை கார் ஓட்டுனர், உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தம்
போலீசாரை கண்டித்தும் மற்றும் ஓட்டுனர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் உருவாக்கிட வலியுறுத்தியும் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்,
சென்னையில் கால் டாக்சி டிரைவர் ராஜேஸ், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததற்கு காரணமான போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், வாகன ஓட்டுனர்களை தரக்குறைவாக பேசும் போலீசாரை கண்டித்தும் மற்றும் ஓட்டுனர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டம் உருவாக்கிட வலியுறுத்தியும் ஜெயங்கொண்டத்தில் உள்ள அப்துல் கலாம் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் வாடகை கார் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story