பழுதடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி 10-ந் தேதி தொடக்கம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு


பழுதடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி 10-ந் தேதி தொடக்கம் - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2019 5:00 AM IST (Updated: 6 Feb 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

பழுதடைந்த தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி 10-ந் தேதி தொடங்க உள்ளது. இதனை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

ஆரணி,

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சி வீரக்கோவில் தெருவில் 1982-ம் ஆண்டு திறக்கப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. அந்த தொட்டியை இடித்துவிட்டு ரூ.20 லட்சத்தில் அதே இடத்தில் மீண்டும் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் அனுமதி பெறப்பட்டது.

அதன்படி பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை 10-ந் தேதி இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் சென்று பழைய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அப்போது அவர் கூறுகையில், “சேவூர் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுப்பாளையம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.12 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் அமைக்கும் பணியும் வரும் ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கப்படஉள்ளது, என்று தெரிவித்தார்.

அப்போது ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வி.திலகவதி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மதுசூதனன், உதவி பொறியாளர் சீனுவாசன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சாந்திசேகர், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வக்கீல் கே.சங்கர், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, சேவூர் ஊராட்சி மன்ற முன்னாள்தலைவர் பெருமாள், அத்திமலைப்பட்டு அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தலைவர் சங்கரி பாலசந்தர், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவா உள்பட பலர் இருந்தனர்.


Next Story