கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மத்திய அரசால் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை


கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மத்திய அரசால் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை
x
தினத்தந்தி 5 Feb 2019 11:30 PM GMT (Updated: 5 Feb 2019 10:07 PM GMT)

கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மத்திய அரசால் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை என்று பொள்ளாச்சியில் கமல்ஹாசன் கூறினார்.

பொள்ளாச்சி, 

மக்கள் நீதி மய்யம் சார்பில் மேற்கு மண்டல நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப் பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சி பணி மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட, தொகுதி, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேச வில்லை. எங்களுக்கு எந்த தக வலும் வரவில்லை. கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். மக்கள் தான் முக்கியம். மக்கள் தான் தலைவர்கள். நாங்கள் எல் லாம் தொண்டர்களாக வேண் டும். நிஜமாகவே கிராமசபை கூட்டம் என்பது நாங்கள் மக்களை வலுப் படுத்து வதற்காக சொன்னது. தி.மு.க. கட்சியை வலுப்படுத்துவதற்கு சொன்னது. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. வருங் காலத்தில் மக்கள் என்னை வழிநடத்தும் தலைவ ராவேன்.

விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் உள்ளன. இதற்காக விவசாயிகளிடம் பேசி வருகிறோம். போராட்டம் என்பது சாலை மறியல், சட்ட ஒழுங்கு பிரச்சினை செய்வது இல்லை. மக்களுக்கு இடையூறு செய்வது போராட்டம் அல்ல. போராட்டம் என்பது பெரிய வார்த்தை.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட் பாளர்களை நிறுத்தும்போது அதன் வலிமை தெரியும். நான் பேசுவது புரியவில்லை என்று சொன்னால், அவர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகள் பேசி வருகின்றன. என்னிடம் வரும்போது முடிவு எடுக்கப் படும். முடிந்தால் தனித்தும் நிற்போம். கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. கருத்துக் கணிப்புகள் என்பது கருத்து திணிப்பாகும். முன்னேறும் தமிழகம் என்பதை இலக்காக கொண்டு மக்கள் நீதி மய்யம் செல்லும்.

என் கட்சிக்கும், எனது மக்களுக்கும் பணம் சேர்க்கவே நான் நடிப்பேன். அரசியலுக்கு வரும் முன்பே படங்களில் அரசியல் பேசி இருக்கிறேன். முழுநேர அரசியல்வாதி யாரும் இல்லை. அரசியல் மட்டும் வாழ்வாதாரமாக இருக்குமானால் கஜானாவில் கை வைத்துவிடுவார்கள். மக்களுக்கு பயன்படாத எந்த கட்சியாக இருந்தாலும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்த மத்திய அரசால் தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை. புயல் அடித்தால் கூட உதவி செய்ய யாரும் இல்லை.

ரஜினிகாந்த் எனக்கு ஆதரவு கொடுப்பதாக தகவல் தான் வந்தது. ஆனால் அவரிடம் இருந்து நேரடியாக எந்த தகவலும் வரவில்லை. மத்தியில் ஆளுபவர்கள் எல்லா இடத்தையும் ஒன்று போல் பார்க்க வேண்டும். எங்கு நமக்கு ஆதரவு இருக்கிறது என்பதை பார்த்து செயல்படக்கூடாது. மம்தா பானர்ஜியை, தமிழக அரசுடன் ஒப்பிட்டு பார்த்து அவர்களை அவமானப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story