மன்னார்குடி பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு


மன்னார்குடி பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Feb 2019 11:00 PM GMT (Updated: 6 Feb 2019 7:02 PM GMT)

மன்னார்குடி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

சுந்தரக்கோட்டை,

மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட சவளக்காரன் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைய உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வுதள வசதி, மின்சாரம், குடிநீர், கட்டிடத்தின் உறுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட ராஜாம்பாளையம் நடுநிலைப்பள்ளி, பிரகாசம் உதவிபெறும் தொடக்கப்பள்ளி, வாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என அவர் பார்வையிட்டார்.

பின்னர் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட சோழபாண்டி கிராமத்தில் மீனாட்சி மாரியப்பா உயர்நிலைப்பள்ளி, தலையாமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலையூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, கோட்டூர் ஓன்றியத்திற்குட்பட்ட இடச்சுமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருகவாழ்ந்தான் கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கெழுவத்தூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைப்பதற்காக கட்டிடத்தின் அளவு, சாய்வுதள வசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, தாசில்தார் லட்சுமி பிரபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story