ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 11-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 11-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2019 4:00 AM IST (Updated: 7 Feb 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே திருக்காரவாசலில் ஹைட்ரோகார்்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 11-வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருக்காரவாசல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் கடந்த 27-ந் தேதி முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று 11-வது நாளாக கிராம மக்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்தது. போராட்டத்துக்கு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை செயலாளர் வரதராஜன், போராட்டக்குழு நிர்வாகிகள் தியாகராஜன், சுப்பையன் மற்றும் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்போது காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் வாழ்வாரத்தை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்ததால்் வீதியில் இறங்கி போராடி வருகிறோம். தமிழக சட்டமன்றத்தில தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் திருக்காரவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி நாளை காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story