திருவள்ளூரில் கஞ்சா பதுக்கிய 3 பெண்கள் கைது


திருவள்ளூரில் கஞ்சா பதுக்கிய 3 பெண்கள் கைது
x
தினத்தந்தி 7 Feb 2019 3:45 AM IST (Updated: 7 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருவள்ளூர் பஸ் நிலையம், ஏரிக்கரை, காக்களூர் சந்திப்பு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த பெண்கள் போலீசாரை கண்டதும் கையில் வைத்திருந்த கோணிப்பையுடன் ஓட்டம் பிடித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்களை விரட்டிச் சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

பிடிபட்ட பெண்களிடம் போலீசார் சோதனை செய்தபோது அவர்கள் 1½ கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்ட பெண்கள் திருவள்ளூர் ஏரிக்கரையை சேர்ந்த கன்னியம்மாள் (வயது 55), லட்சுமி என்ற சுகுணா(44), வனிதா (38) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story