கிருஷ்ணகிரியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 7 Feb 2019 11:00 PM GMT (Updated: 7 Feb 2019 3:45 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, 

பொது சுகாதாரத்துறை தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. பழையபேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், காலணிகள், ஊன்றுகோல் போன்ற உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி பயனாளிகளுக்கு வழங்கினார். ஊர்வலம் காந்தி ரோடு, 5 ரோடு ரவுண்டானா வழியாக சென்று, அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது. இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

முன்னதாக தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் படிக்க, அதை மாணவ, மாணவிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திருப்பி கூறி, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை நிலைய டாக்டர் பரமசிவம், துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் நெடுமாறன், துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் கவிதா மற்றும் டாக்டர்கள் சங்கர், விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story