10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
பெருந்துறை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 4-ந் தேதி திடீரென மாயமானார். அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இதனால் மாணவியை மீட்டு தரும்படி பெற்றோர், காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 19 வயது வாலிபர் ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த புகார் மனு ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், வாலிபரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், மாணவியை மீட்டனர். மேலும், மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story