ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் திரைப்பட இயக்குனர் கவுதமன் பேட்டி
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசல் கிராமத்தில் இருந்து நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை 244 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 26–ந்தேதி குடியரசு தினத்தன்று திருக்காரவாசலில் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கடந்த 27–ந்தேதி முதல் கிராமமக்கள் மண்டியிட்டு கையேந்தியும், கருப்பு கொடி ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும், வாயில் கருப்பு துணி கட்டியும் என பல்வேறு வழிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ், கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்து கிராமமக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இரவில் நடைபெறும் காத்திருப்பு போராட்டம் நாளை (இன்று) தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் திருக்காரவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நிரந்தர தடை விதித்தும், மக்களை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற உறுதிபட அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று 12–வது நாளாக திருக்காரவாசல் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தில் நிர்வாகிகள் தியாகராஜன், சுப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மக்களின் வாழ்வாரத்தை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திரைப்பட இயக்குனர் கவுதமன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என இப்பகுதி மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தமிழக அரசு தனது நிலையை தெளிவுப்படுத்த வேண்டும். மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது. மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து இந்தியா வல்லரசாக மாறிட வேண்டாம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனே மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story