மாகிமில் 4 வயது சிறுமி கற்பழித்து கொலை
மாகிமில் 4 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். அவளை கற்பழித்து கொன்ற ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
மும்பை மாகிமில் உள்ள ஒரு நடைபாதையில் பெற்றோருடன் வசித்து வந்த 4 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலை திடீரென காணாமல் போய் விட்டாள். கலக்கம் அடைந்த பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தனர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் இதுபற்றி அவர்கள் மாகிம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், மாகிமில் உள்ள மிக்கேல் தேவாலயம் அருகில் அந்த சிறுமி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தாள். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சிறுமி கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்தி கற்பழித்து கொன்ற மர்மஆசாமியை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி கடத்தி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story