நாகையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக அலுவலர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு


நாகையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக அலுவலர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Feb 2019 10:15 PM GMT (Updated: 7 Feb 2019 7:15 PM GMT)

நாகையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அலுவலரை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் உடையார் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 64). இவர் அரசு போக்கு வரத்து கழக கும்பகோணம் பணிமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் நாகையில் உள்ள தனது நண்பர் முருகனை பார்ப்பதற்காக வந்துள்ளார். நாகை புதிய பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போதுஆட்டோ ஒன்று அவர் மீது உரசியுள்ளது. இதில் செல்வத்தின் சட்டை கிழிந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனால் ஆட்டோ டிரைவருக்கு, செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தாக்குதல்

இதையடுத்து நாகை தாசில்தார் அலுவலகம் அருகே செல்வம் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்தஆட்டோ டிரைவர் “நீ என்ன பெரிய ஆளா“ என கூறி சரமாரியாக செல்வத்தை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story