குமரி மாவட்டத்தில் 80 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிப்பு வனத்துறை அதிகாரிகள் தகவல்
நீர்நிலைகளில் நடந்த கணக்கெடுப்பில் 80 வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் குளங்கள், காயல் போன்ற நீர்நிலைகளில் கடந்த சில நாட்களுக்கு முன் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. 3-வது கட்டமாக நேற்று மீண்டும் நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இந்த கணக்கெடுப்பு பணியில் மாவட்ட வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் ஆகியோர் ஈடுபட்டனர்.
10 குழுக்களாக பிரிந்து சென்று இந்த கணக்கெடுப்பு பணியை அவர்கள் மேற்கொண்டனர். மணக்குடி காயல், புத்தளம், தேரூர், சுசீந்திரம், தத்தையார்குளம் உள்ளிட்ட குளங்கள் ஆகியவற்றில் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில் வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் ஏராளமாக கண்டறியப்பட்டன.
பூநாரை, கூழக்கடா, மஞ்சள் மூக்கு வாத்து, மண்வெட்டு தாரா, மாடு மேய்ச்சான் கொக்கு, வெண் கொக்கு உள்ளிட்ட 80 வகையான உள்நாட்டு, வெளிநாட்டு பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.
வனத்துறையினரால் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணி முறையான திட்டமிடுதல் இல்லாமல் நடைபெறுவதாகவும், முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் வெளியிடாததால் பங்கேற்க விரும்பும் பறவைகள் ஆர்வலர்கள் பலர் இதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வனத்துறை அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் சிலரை மட்டுமே கணக்கெடுப்பு பணிக்கு அழைத்துச் செல்கின்றனர் என்றும் பறவைகள் ஆர்வலர்கள் பலர் தங்களது குமுறலை வெளியிட்டுள்ளனர். மேலும் இனிமேலாவது இதுபோன்ற கணக்கெடுப்பு பணிகளை நடத்தும்போது முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட்டு நடத்த வேண்டும் என்பதும் அவர்களது வேண்டுகோளாக இருக்கிறது.

Related Tags :
Next Story