காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் பிறந்தநாள் விழா முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் ஏ.கே.டி. ஆறுமுகம். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி காங்கிரசார் மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி தங்கத்தேர் இழுத்தனர்.மேலும் கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவில், கதிர்காமம் முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபட்டனர். அதைத்தொடர்ந்து தர்மாபுரி ஸ்ரீராம் திருமண நிலையத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் ஏ.கே.டி. ஆறுமுகம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், தனவேலு, தீப்பாய்ந்தான், விஜயவேணி, சிவா (தி.மு.க.), பாஸ்கர் (அ.தி.மு.க.), புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர், மாநில செயலாளர் செந்தில்குமார், தொழிலதிபர்கள் சப்தகிரி ராமலிங்கம், வி.பி.எஸ்.ரமேஷ், ராஷ்டீரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள், தொழிலதிபர்கள் பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த 25 குழந்தைகளுக்கு ஏ.கே.டி. ஆறுமுகம் தங்க மோதிரம் அணிவித்தார். பூத்துறையில் மன நல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கப்பட்டன. இந்திரா நகர் வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் இலவச கண் சிகிச்சை, ரத்ததானம் ஆகிய முகாம்கள் நடத்தப்பட்டன.

Related Tags :
Next Story