நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி 300 பேர் பங்கேற்பு


நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி 300 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 8 Feb 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 300 பேர் கலந்து கொண்டனர்.

நாமக்கல், 

நாமக்கல் தேசிய பசுமைபடை சார்பில் ‘பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ம் வகுப்புக்கு மற்றொரு பிரிவாகவும் பேச்சுப்போட்டி, வினாடி-வினா மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1,000, 3-ம் பரிசாக ரூ.500 வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் கலந்து கொண்டார். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் செய்து இருந்தார்.

Next Story