தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கம்


தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:15 AM IST (Updated: 10 Feb 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரத்தின் செயல்விளக்கத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 2,287 வாக்குச்சாவடி உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரம் பயன் படுத்தப்பட உள்ளது.

இந்த கருவியின் செயல்பாட்டை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் நேற்று தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எந்திரத்தின் செயல்பாட்டை அறிந்து கொண்டனர்.

முன்னதாக இந்த செயல் விளக்கத்தை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து கூறுகையில், “வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்த 7 வினாடிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த எந்திரத்தில் தெரியும். ஆனால் அந்த துண்டு சீட்டை வாக்காளர்களிடம் தர முடியாது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் இந்த எந்திரம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது”என்றார்.

Next Story