பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு செய்தனர்.
சென்னை,
சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிதாக நிறுவப்பட்டுள்ள கேபிள் அறுக்கும் எந்திரத்தை அவர் பார்வையிட்டார். ஆய்வின்போது பொதுமேலாளர் அதிகாரிகளிடம் கூறியதாவது:-
டீசல் ரெயில் என்ஜின்களில் உட்புறத்தில் ஒட்டப்படும் அலங்காரங்கள் போன்று மின்சார ரெயில் என்ஜின்களிலும் சோதனை அடிப்படையில் ஒட்டவேண்டும். மேலும் டீசல் ரெயில் என்ஜின்களுக்கு பெரிய ஜன்னல்கள் வைக்கவேண்டும். இதனால் ரெயில் என்ஜினை இயக்கும்போது டிரைவர்களுக்கு தண்டவாளங்கள் எளிதாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரஸ்தா பரிசு வழங்கினார்.

Related Tags :
Next Story