நாகையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தினை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும்், வாக்குச்சாவடி மையங்களுக்கு ஏற்றார் போல் 3 மற்றும் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பயிற்்சியாளர்களை கொண்டு, வாகனத்தின் மூலம் நேரடியாக பொதுமக்களிடையே சென்று அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த குழுக்களில் உள்ள அலுவலர்கள் 14-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு குறைந்தது 4 வாக்குசாவடி மையங்களுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பத்ரிநாத், தாசில்தார் (தேர்தல்) ராஜகோபால், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story