மாவட்ட அளவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசளிப்பு
மாவட்ட அளவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட அளவில் மத்திய அரசின் நிதி உதவியுடன் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பங்கேற்பை மேம்படுத்துதல் எனப்படும் இம்பார்ட் சிறப்பு செயல்திட்டத்தின் மூலம் சிறந்த ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட அளவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளாக தமிழ் பாடத்தில் காரை அரசு மேல்நிலைப்பள்ளியும், ஆங்கில பாடத்தில் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியும், கணித பாடத்தில் இரூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், அறிவியல் பாடத்தில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், சமூக அறிவியல் பாடத்தில் சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளியும் தேர்வு செய்யப்பட்டன.
இதையடுத்து சிறந்த ஆய்வு கட்டுரைகளை உருவாக்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தலைமை தாங்கிய பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் சிறந்த ஆய்வு கட்டுரைகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ் கள், கேடயங்களையும் வழங்கி பாராட்டினார். விழாவிற்கு மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் முதன்மை கருத்தாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story