சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டு உள்ளது. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் புகழ்பெற்ற பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அப்போது ஏராளமான பக்தர்கள் அங்குள்ள 7 மலைகளில் ஏறிச் சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை தரிசித்து விட்டு திரும்புவது வழக்கம்.
மேலும் வெள்ளியங்கிரி மலையில் அவ்வப்போது காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங் கப்படும். இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மலை மீது செல்ல தற்போது பக்தர்களுக்குஅனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் மலை மீது சென்று லிங்கத்தை தரிசித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் மலைஏறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாகதான் 7-வது மலைக்கு செல்ல வேண்டும். இங்கு காட்டு யானை, சிறுத்தைப்புலி, காட்டெருமை, செந்நாய், கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. தற்போது தண்ணீர் தேடி வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. எனவே பக்தர்கள் வழியை விட்டு விலகி வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது.
அதுபோன்று இலையுதிர் காலமும் தொடங்கி உள் ளது. எனவே வனப்பகுதியில் இருக்கும் மரங்களின் இலைகள் கீழே விழுந்து கிடக்கின்றன. இதன் காரணமாக எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மலைக்கு செல்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. தின்பண்டங் களை காகித பையில் எடுத்துச்செல்ல வேண்டும். பக்தர்கள் தனியாக செல்லும்போது வழிமாறி செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே குழுவாக சென்றால் பாதுகாப்பாக இருக்கும்.
மலைமீது செல்லும் பக்தர்கள் வழிமாறி செல்வதை தடுக்க, ஆங்காங்கே வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மலைக்கு யாரெல்லாம் செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க, அடிவாரத்தில் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
எனவே பக்தர்கள் மலைக்கு செல்ல கோவில் அடிவாரத்தில் உள்ள வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வழியை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story