மாவட்ட செய்திகள்

மின்வாரிய ஊழியர் வீட்டில்22 பவுன் நகை, பணம் திருட்டுமர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Home electrical worker 22 poue jewelry, money theft The police are searching for mystery people

மின்வாரிய ஊழியர் வீட்டில்22 பவுன் நகை, பணம் திருட்டுமர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

மின்வாரிய ஊழியர் வீட்டில்22 பவுன் நகை, பணம் திருட்டுமர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
அரூர் அருகே மின்வாரிய ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 22 பவுன் நகை, ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பறையப்பட்டி புதூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 45). இவர் தீர்த்தமலை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி இளமதி. நேற்று முன்தினம் ராமலிங்கம் பணிக்கு சென்று விட்டார். இளமதி வீட்டை பூட்டி விட்டு அரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் மாலை இளமதி வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 60 கிராம் வெள்ளி மற்றும் ரூ.12 ஆயிரம் திருட்டு போனது. மேலும் சமையல் அறையில் ஒரு பையில் மறைத்து வைத்திருந்த 22 பவுன் நகையும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து நகை, வெள்ளி மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
2. தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம், 15 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
தலைவாசல் அருகே தம்பதியை கட்டிப்போட்டு ரூ.1 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பொள்ளாச்சியில் அடுத்தடுத்து சம்பவம், 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மின்தடையை பயன்படுத்தி கும்பல் கைவரிசை
பொள்ளாச்சியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்றனர். மின்தடையை பயன்படுத்தி ஒரே கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.
4. வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை
வாணாபுரம் அருகே நகைக்கடை ஊழியர் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகை, ரூ.55 ஆயிரம் திருட்டு
காரிமங்கலம் அருகே ஆசிரியை வீட்டில் 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் திருட்டு போனது.

ஆசிரியரின் தேர்வுகள்...