மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 9:15 PM GMT (Updated: 11 Feb 2019 9:05 PM GMT)

மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம், 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலமரத்துப்பட்டி செட்டிமாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன் (வயது 46), கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயதான இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரை கற்பழித்தார். பின்னர் அவர் தனக்கு நடந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் எடுத்துக்கூறி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பில் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதையனை கைது செய்தனர். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு மாதையன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த கூலித்தொழிலாளி மாதையனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விஜய குமாரி தீர்ப்பு கூறினார்.

Next Story