மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம் + "||" + About 2,500 people are eligible for 153 Anganwadi Center vacancies in the district

மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம்

மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பம்
திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 153 அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதுகலை பட்டதாரிகளும் வேலையில் சேர ஆர்வமாக விண்ணப்பம் செய்து உள்ளனர்.
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் 153 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிபணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அங்கன்வாடி மைய பணியாளர் பணியிடத்துக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என கல்வி தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்காக கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு நேற்று கடைசி நாள் ஆகும். இதனால் திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களை கொடுப்பதற்காக நேற்று ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி புவனேஸ்வரி கூறுகையில் ‘153 பணியிடங்களுக்கு சுமார் 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். அங்கன்வாடி மைய பணியாளர் பணியிடத்துக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்றாலும் பிளஸ்-2 படித்தவர்களும், பட்டதாரிகளும் அதிக அளவில் விண்ணப்பம் செய்து உள்ளனர். எம்.ஏ, எம்.சி.ஏ படித்த முதுகலை பட்டதாரிகளும் கூட ஆர்வமாக விண்ணப்பித்து உள்ளனர்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு 2,500 பேர் விண்ணப்பம்
ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலை நிறுத்தத்தால் நிறைய தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்காமல் மூடப்பட்டிருந்தன.
2. 4-ந்தேதி நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வுக்கு 8 ஆயிரம் பேர் விண்ணப்பம்
4-ந்தேதி நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வை எழுத 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
3. கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பம்
கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 55 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4. தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்கலாம்
தொழில் நல்லுறவு விருதுபெற வேலையளிப்பவர்களும், தொழிற்சங்கங்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், அடுத்த மாதம் 10-ந் தேதி இதற்கான கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. 5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பம்
மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் 5,345 பேர் வாக்காளர்களாக சேர விண்ணப்பித்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...