நட்பை துண்டித்த சிறுமி பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


நட்பை துண்டித்த சிறுமி பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 11 Feb 2019 10:53 PM GMT (Updated: 11 Feb 2019 10:53 PM GMT)

ராஜபாளையத்தில் நட்பை துண்டித்த சிறுமி பற்றி முகநூலில் அவதூறு பரப்பிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மதுசுடியான்.இவரது மகன் ரெகனிக்ஸ்(வயது19).இவருக்கும் 16 வயது சிறுமிக்கு இடையே முகநூல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்நிலையில் ரெகனிக்சின் பழக்க வழக்கங்கள் பிடிக்காத காரணத்தால் அவருடனான நட்பை சிறுமி துண்டித்துவிட்டார்.

இதையடுத்து அந்த வாலிபர் சிறுமி பற்றி முகநூலில் அவதூறான தகவல்களை பதவிசெய்து பரப்பினாராம். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டிற்கு போன் செய்து சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெகனிக்சை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story