மாவட்ட செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கியில் வேலை + "||" + Ex-soldiers to work in the Bank

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கியில் வேலை

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வங்கியில் வேலை
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்திய யூனியன் வங்கியில் 100 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று யூனியன் பேங்க் ஆப் இந்தியா. தற்போது இந்த வங்கியில் ‘ஆர்ம்டு கார்டு’ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. இவை முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பணியிடங்களாகும். மொத்தம் 100 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவு விண்ணப்பதாரர் களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். அதிகபட்சம் ராணுவ பணியில் இருந்தவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆன்லைன் தேர்வு மற்றும் உடல் உறுதி தேர்வின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். வருகிற பிப்ரவரி 18-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஹால்டிக்கெட் அழைப்பு கடிதம் மார்ச் 1-ந்தேதி பதிவிறக்கம் செய்யலாம். ஆன்லைன் தேர்வு மார்ச் 17-ந் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும். www.unionbankofindia.co.inஎன்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
2. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
5. அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...