எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை - 231 காலியிடங்கள்


எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை - 231 காலியிடங்கள்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:58 AM GMT (Updated: 12 Feb 2019 11:58 AM GMT)

அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக எய்ம்ஸ் என அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை - ஆய்வு மையங்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது.

தற்போது போபாலில் செயல்படும் எய்ம்ஸ் மைய கிளையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட், புரோகிராமர், பார்மசிஸ்ட், சானிடரி இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர், மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன், வயர்மேன், டிரைவர், ஸ்டோர்கீப்பர், பிளம்பர், வயர்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 231 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகபட்சமாக லேப் அட்டன்ட் பணிக்கு 41 இடங்களும், பார்மசிஸ்ட் பணிக்கு 27 இடங்களும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 20 இடங்களும், டெக்னீசியன் பணிக்கு 40 இடங்களும், வயர்மேன் பணிக்கு 20 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு உள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி

பி.இ., பி.டெக், பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்தவர்கள், பார்மசி, மெடிக்கல் ரெக்கார்டு போன்ற துணை மருத்துவ படிப்புகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு சுருக் கெழுத்து கற்றவர்கள் என பலதரப்பட்ட படிப்புகளை முடித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பம் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும் இது பற்றிய விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://www.aiimsbhopal.edu.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story