மாவட்ட செய்திகள்

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் 575 பணிகள் + "||" + 575 jobs at the Medical Research Center

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் 575 பணிகள்

மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் 575 பணிகள்
காசநோய் ஆராய்ச்சி மையங்களில் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 575 பேர் தோ்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி மையம் சென்னை சேத்துப்பட்டில் செயல்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது இந்த ஆராய்ச்சி மையத்தில் திட்ட தொழில்நுட்ப அதிகாரி (பி.டி.ஓ.), டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 575 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களில் ஆராய்ச்சியாளர் (கிரேடு-சி) பணிக்கு 23 இடங்களும், திட்ட தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு 69 இடங்களும், திட்ட உதவியாளர் பணிக்கு 46 இடங்களும், டெக்னீசியன் (கிரேடு-3) பணிக்கு 161 இடங்களும், டெக்னீசியன் (கிரேடு2) பணிக்கு 161 பேரும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 23 பேரும், டிரைவர் கம் மெக்கானிக் பணிக்கு 23 பேரும், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 46 பேரும், சீனியர் புராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு 23 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழக ஆராய்ச்சி மையத்திற்கு குறிப்பிட்ட அளவில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு செல்ல விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 40 வயதுஉடையவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு தளர்வும் மத்திய அரசு விதி களின்படி பின்பற்றப்படுகிறது.

முதுநிலை மருத்துவ படிப்புடன் பணியனுபவம் பெற்றவர்கள் ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் இளநிலை முதுநிலை படித்தவர்கள், 12-ம் வகுப்பு படிப்புடன், தட்டச்சுத் திறன் பெற்றவர்கள், பி.எஸ்சி. படித்தவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசென்சு பெற்றவர்களுக்கு பணிவாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பு, கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். வருகிற 13-ந்தேதி முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. எந்த தேதியில் எந்த பணிகளுக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு விண்ணப்பதாரர்கள் நேரில் செல்ல வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை www.nirt.res.in/www.icmr.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணிகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 325 அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
2. வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்
மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
3. எய்ம்ஸ் மருத்துவ மையங்களில் கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு 247 இடங்கள்
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் மற்றும் ஸ்டெனோ, பார்மசிஸ்ட் போன்ற பணிகளுக்கு 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. திருச்சி என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் பணி - 134 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்
திருச்சி என்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
5. அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் வேலை
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் அப்பர் டிவிஷன் கிளார்க், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...