புதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை


புதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 4:00 AM IST (Updated: 12 Feb 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

உத்திரமேரூர் பகுதியில் புதைந்து கிடக்கும் தொன்மையான சிலைகளை தொல்பொருள் ஆராய்ச்சித்துறை மீட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்திரமேரூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குடவோலை தேர்தல் மூலம் இந்த உலகத்திற்கு தேர்தலை அறிமுகம் செய்த பெருமைக்குரிய இடமாகும். இங்கு பல்வேறு அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். எனவே அவர்களால் கட்டிட கலைகளும், சிற்பக்கலைகளும் கொண்ட பல்வேறு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக இன்றும் பல்வேறு கோவில்கள் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ளன. இதில் பல கோவில்கள் தரைமட்டமாகியுள்ளது.

இதிலுள்ள சிலைகளை யாரும் கண்டுகொள்ளாததால் உடைந்தும், சிதைந்தும் காணப்படுகிறது. உத்திரமேரூரில் இருந்து எண்டத்தூர் செல்லும் சாலையில் உள்ள பித்திளி குளம் அருகிலுள்ள மண்மேடு ஒன்றில் ஒரு சாமி சிலை கழுத்துப்பகுதி உடைந்த நிலையில் உள்ளது, அதன் அருகில் மேலும், 2 சாமி சிலைகள் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. அதிலொன்று ஜோஸ்டதேவி சிலையென்றும், மற்றொன்று பிரம்மா சிலையென்றும், உடைந்து போனசிலை விஷ்ணு துர்க்கை சிலை என்றும் கூறப்படுகிறது. இந்த சிலைகள் பல்லவர் காலத்தை சேர்ந்தது என்றும், இந்த மண்மேட்டை ஆய்வுசெய்தால் இன்னும் பல சிலைகள் கிடைக்கக்கூடும் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோன்று உத்திரமேரூரை அடுத்த நல்லூர் என்னும் இடத்தில் உள்ள வயல்வெளியில் தசரதன் என்பவரின் நிலத்திற்கு அருகில் சிவலிங்கம் ஒன்றும் மற்றொரு பெண் தெய்வத்தின் சிலையும் மண்ணில் புதைந்தநிலையில் உள்ளது. அதன் அருகில் நந்திசிலை முகம் உடைந்தநிலையில் உள்ளது. இந்த சிலைகள் சோழர் காலத்தை சேர்ந்தது என்று கூறுகின்றனர். இதே போன்று உத்திரமேரூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாமி சிலைகள் கேட்பாரற்று சிதைந்து போயுள்ளது.

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் பாலாஜி உத்திரமேரூர் தாசில்தார், மாவட்ட கலெக்டர், தொல்பொருள் ஆராய்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என பலரிடம் இந்த சிலைகளை மீட்டு பாதுகாக்க கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார். இருப்பினும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இந்த வரலாற்று சிறப்புமிக்க சாமிசிலைகளை மீட்டு பாதுகாக்க தொல்பொருள் ஆராய்ச்சித்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்

Next Story