மாவட்ட செய்திகள்

திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் + "||" + Police officers in 4 districts, including Trichy, were transferred to the workplace

திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திருச்சி உள்பட 4 மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி,

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் போலீஸ் துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை தேர்தலுக்கு முன்பே பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட உள்ளது.


அதன்அடிப்படையில் திருச்சி பொன்மலை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீராபாய் ஆகியோர் திருச்சி மத்திய மண்டலத்திற்கும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கீழப்பழூவூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, புதுக்கோட்டை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஆகியோர் திருச்சி மாநகரத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ஸ்ரீரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம், கோர்ட்டு சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா, பொன்மலை சட்டம் மற்றும் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், அன்புசெல்வி, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நளினி, கே.கே.நகர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் பவுல்ட்ரி, அரியமங்கலம் குற்றப்பிரிவு ஜோசப், பொன்மலை அனைத்து மகளிர் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்னம்மாள் ரேனி ஆகியோர் திருச்சி மத்திய மண்டலத்திற்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, புதுக்கோட்டை டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், விஜயகுமார், கணேஷ்நகர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி, கந்தர்வகோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், நகுடி சப்-இன்ஸ்பெக்டர் நவீன்குமார், பெரம்பலூர் மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சாவித்ரி, அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, புதுக்கோட்டை கட்டுப்பாட்டு அறை சப்-இன்ஸ்பெக்டர் லலிதா பிரியதர்ஷினி, அரியலூர் கூவாகம் சப்-இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் திருச்சி மாநகரத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜூ பிறப்பித்துள்ளார். மேலும் இதேபோல பலர் பணியிடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இதேபோல ஸ்ரீரங்கம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், வெடிபொருள் கண்டறியும் பிரிவிற்கும், கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் பொன்மலைக்கும், கொடுஞ்செயல் குற்றப்பிரிவு தனிப்படை இன்ஸ்பெக்டர் ரோசலின், பொன்மலை குற்றப்பிரிவிற்கும், உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி, குற்றப்பிரிவு தனிப்படைக்கும், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் காவேரி விமானநிலையத்திற்கும், விமானநிலைய இன்ஸ்பெக்டர் பெரியய்யா, சைபர் கிரைம்க்கும், பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் நிலையத்திற்கும், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பாதுகாப்பு பிரிவுக்கும், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, கே.கே.நகருக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இருந்து இடமாறுதலில் வரும் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவுக்கும், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஸ்ரீரங்கத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றப்பட்டது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் பரபரப்பு வாலிபரை கொன்று சுடுகாட்டில் உடல் எரிப்பு காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் வாலிபரை கொன்று உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் தோல்வி? போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது சாவுக்கு காதல் தோல்வி காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3. ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை
ஈரோட்டில் தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ள கடலோர போலீஸ் நிலையத்திற்கு போதிய அளவில் போலீசாரை நியமித்து, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு
கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு கொடுத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை