மாவட்ட செய்திகள்

புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கோரி கிராம சேவை மையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் + "||" + The public waits for the civil service center demanding that the storm relief is not available

புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கோரி கிராம சேவை மையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கோரி கிராம சேவை மையத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறி கிராம சேவை மையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் நவம்பர் 16– ந் தேதி கடுமையாக தாக்கிய கஜா புயலால் தென்னை, பலா, தேக்கு, போன்ற அனைத்து மரங்களும் உடைந்து முற்றிலும் சேதமடைந்தன. அதேபோல பலத்த காற்றின் வேகத்தில் ஓடு மற்றும் கூரை வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலையில் சேதமடைந்த வீடுகளை மராமத்து செய்ய உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து நிவாரண தொகையை வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும், மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளாண்விடுதி கிராமத்தில் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 57–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 4 முறை விண்ணப்ப மனு கொடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறி கடைவீதியில் உள்ள கிராம சேவை மையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பொதுமக்களின் காத்திருப்பு போராட்டம் பற்றி தகவல் அறிந்து வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் சுமார் 25–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் சாந்தி மற்றும் கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கண்ணீரோடு தங்கள் கோரிக்கைகளை கூறினர். அப்போது புயல் தாக்கி 20 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு தான் இதுவரை நிவாரணம் வந்துள்ளது. அதனால் நிவாரணம் கிடைக்காதவர்கள் காலம் கடந்து விண்ணப்பம் கொடுத்தவர்களாக இருக்கும் என்று வருவாய் ஆய்வாளர் கூறினார். ஆனால் ஒவ்வொருவரும் 4 முறை விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம், அதிலும் 10 நாட்களுக்குள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.


மேலும் தற்போது 57 பேருக்கு மட்டும் நிவாரண தொகை கிடைக்கவில்லை. ஆனால் வருவாய் கணக்கில் அதில் 26 பேருக்கு பணம் வழங்கி இருப்பதாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது என்றனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் இதுவரை மனு கொடுத்தது போல தற்போதும் அனைவரும் மனு தயார் செய்து என்னிடம் கொடுங்கள். வருவாய் ஆய்வாளரிடம் நான் கொடுத்து நாளை (இன்று) மாலைக்குள் அந்த மனுக்களுக்கான தீர்வு என்ன என்பதை கேட்டு சொல்கிறேன் என்று கூறியதால் இன்ஸ்பெக்டரிடம் அனைவரும் நிவாரணம் கேட்டு 5–வது முறையாக மனு கொடுத்து விட்டு களைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. புயலில் சாய்ந்த அனைத்து தென்னை மரங்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் சாலை மறியல்
புயலில் சாய்ந்த அனைத்து தென்னை மரங்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
2. புதுக்கோட்டை காந்திநகரில் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
புதுக்கோட்டை காந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
3. புயல் நிவாரண பொருட்களை கேட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புயல்நிவாரணம் பொருட்களை கேட்டு கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
4. புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவ கிராம மக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவ கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
5. புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - சீமான் கண்டனம்
புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...