நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றம்: அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2019 4:30 AM IST (Updated: 13 Feb 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகராட்சி, மாநகராட்சியாக மாற்றப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்“ என்று அறிவித்தார். இந்த நிலையில் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்துவதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். மேலும், நாகர்கோவிலில் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நகராட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் நகர்நல அதிகாரி கின்ஷால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கினார்கள்.

இதே போல குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பஸ் நிலையம் முன் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், சந்துரு, ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். குமரி மாவட்ட பா.ஜனதா சார்பிலும் அண்ணா பஸ் நிலையம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்துராமன், தேவ், தர்மலிங்க உடையார், உமாரதி, ராஜன், அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

Next Story