மாவட்ட செய்திகள்

விதிமுறைகள் மீறினால்எருது விடும் விழா உடனடியாக நிறுத்தப்படும்கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை + "||" + Terms violated The bullshit festival will be stopped immediately Collector Prabhakar warned

விதிமுறைகள் மீறினால்எருது விடும் விழா உடனடியாக நிறுத்தப்படும்கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை

விதிமுறைகள் மீறினால்எருது விடும் விழா உடனடியாக நிறுத்தப்படும்கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
விதிமுறைகளை மீறினால் எருதுவிடும் விழா உடனடியாக நிறுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழாவின் போது 2 மாடுகள் செத்தன. இந்த நிலையில் எருது விடும் விழா குறித்து கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் முதல் எருது விடும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எருது விடும் விழாக்களில் காளைகள் எந்த கிராமத்தில் இருந்து அழைத்து வரப்படுகிறதோ அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் புகைப்படத்துடன் கூடிய சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

பசுக்களை எருது விடும் விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கக் கூடாது என்று விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்படும். அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
108 ஆம்புலன்ஸ் வாகனம் மீதான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
2. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
3. பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகளை இணையதளம் மூலம் இலவசமாக நிறைவேற்றிக்கொள்ளலாம் கலெக்டர் பிரபாகர் தகவல்
பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகளை இணைய தளம் மூலம் இலவசமாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
4. தொழில் நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு நோக்கு முகாம்களில் பங்கேற்று பயனடையுங்கள் கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள்
தொழில் நிறுவனங்கள் நடத்தும் சிறப்பு நோக்கு முகாம்களில் பங்கேற்று பயனடையுங்கள் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...