மாவட்ட செய்திகள்

லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் வாலிபர் பலி + "||" + The young man kills the mire on the paddy harvesting truck in the truck

லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் வாலிபர் பலி

லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் வாலிபர் பலி
லாரியில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை எந்திரம் மீது மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார்.
கீழப்பழுவூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா நாகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகன் மோகன்ராஜ்(வயது 22). இவர் தனது தாய் மாமா மாரியப்பனுக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை, அறுவடைக்காக ஓட்டி வந்தார். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகரின் வயலுக்கு, நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக நேற்று மாலை மோகன்ராஜ், அவருடைய தாய்மாமா மகன் மகேந்திரனுடன்(25) டிப்பர் லாரியில் அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சென்றார். லாரியை மகேந்திரன் ஓட்டினார். மோகன்ராஜ், லாரியில் ஏற்றப்பட்டிருந்த நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்தார். சுதாகரின் வயலுக்கு செல்லும் வழியில் மின்சார கம்பிகளை கவனிக்காமல் லாரியை, மகேந்திரன் ஓட்டியதாக தெரிகிறது.


இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மின்சார கம்பிகள் நெல் அறுவடை எந்திரத்தின் மீது உரசியது. இதனால் நெல் அறுவடை எந்திரத்தில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் லாரியை ஓட்டிய மகேந்திரன் கீழே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். இதையடுத்து மோகன்ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்ம சாவு; உறவினர்கள் சாலை மறியல்
பழனி அருகே தனியார் பால் சுத்திகரிப்பு ஆலையில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்ததாக கூறி, அவரின் உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்
2. பொள்ளாச்சி அருகே மீண்டும் சம்பவம்: காட்டுயானை தாக்கி தொழிலாளி சாவு
பொள்ளாச்சி அருகே நவமலையில் காட்டுயானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி
லாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
4. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
5. புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.