மனநலம் பாதிக்கப்பட்டதால் மாயம் பீகார் வாலிபர், 5 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு


மனநலம் பாதிக்கப்பட்டதால் மாயம் பீகார் வாலிபர், 5 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 11:00 PM GMT (Updated: 13 Feb 2019 7:45 PM GMT)

மனநலம் பாதிக்கப்பட்டதால் மாயமான பீகார் வாலிபர் சென்னை காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு குணம் அடைந்ததை அடுத்து 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தாம்பரம்,

பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்தவர் இந்தல் (வயது 29) திருமணமானவர். கடந்த 2014–ம் ஆண்டு சென்னைக்கு வேலைக்கு வந்த இந்தல் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சொந்த ஊருக்கும் செல்லவில்லை.

இந்த நிலையில் கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை திரிசூலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக இந்தல் சுற்றித்திரிந்தார். பல்லாவரம் போலீசார் அவரை பிடித்து, அவருக்கு துணி கொடுத்து திரிசூலத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர்

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் அவர் குணம் அடைந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என மனநல காப்பக இயக்குநர் சூசைஆண்டனியிடம் அவர் தெரிவித்தார் உடனே பீகார் போலீசார் மூலம் முகவரி கண்டுபிடிக்கப்பட்டு இந்தலின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து பீகாரில் இருந்த அவரது பெற்றோர் திரிசூலத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் மனநல பணியாளர்களுக்கு நன்றி கூறி தன் மகனை அழைத்து சென்றனர்.


Next Story